மும்பை பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து விலகுவதாக கூறிய எம்.கே.நாராயணனின் ராஜினாமாவை பிரதமர் ஏற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலையடுத்து உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் நேற்று பதவி விலகினார். இதையடுத்து நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தை உள்துறை அமைச்சராக மத்திய அரசு நியமித்தது.
இந்நிலையில், நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணனும் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் சமர்ப்பித்ததாக செய்திகள் வெளியாகின.
ஆனால் அதனை மறுத்துள்ள பிரதமர் அலுவலக அதிகாரி, தேசிய ஆலோசகர் பதவியில் எம்.கே.நாராயணன் தொடர்ந்து நீடிப்பார் எனத் தெரிவித்துள்ளார்.