காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதைத் தொடர்ந்து, தேர்தலை புறக்கணிக்குமாறு பிரச்சாரம் செய்து வரும் கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹ¤ரியத் மாநாட்டுத் தலைவர்கள் மற்றும் பல கட்சித் தலைவர்களும் வீட்டுக் காவலில் உள்ளனர்.
மிர்வாய்ஸ் மெளல்வி ஒமர் ·பரூக் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவரது வீட்டைச் சுற்றி பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
இதேப்போன்று புதுடெல்லியில் சிகிச்சை முடிந்து காஷ்மீர் திரும்பிய சையத் அலி ஷா கிலானியும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் தேர்தலைப் புறக்கணிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இதர கட்சித் தலைவர்களும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.