கர்நாடக மாநிலத்தில் தேவாலயங்கள் மீது வெடிகுண்டுகள் வீசிய வழக்கில் அஞ்சுமன் அமைப்பைச் சேர்ந்த 11 பேருக்கு தூக்கு தண்டைனை விதித்து பெங்களூரு தனி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2000ஆம் ஆண்டு ஜுன் மாதம் குல்பர்கா, தார்வார் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களில் வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அஞ்சுமன் அமைப்பை சேர்ந்த 28 பேர் மீது பெங்களூரு தனி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
விசாரணை காலத்திலேயே ஒருவர் இறந்து விட்டார். 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மீதம் உள்ள 23 பேருக்கு நேற்று தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டன. இதில் 11 பேருக்கு தூக்கு தண்டணை வழங்கியும், 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் நீதிபதி சிவனகவுடா தீர்ப்பளித்தார்.