ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கான மூன்றாம் கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.
குப்வாரா மாவட்டத்தில் உள்ள கர்னா, குப்வாரா, ஹந்த்வாரா, லோலேப், லாங்கேட் ஆகிய 5 தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (நவ.30) தேர்தல் நடைபெறுகிறது.
இந்த 5 தொகுதிகளிலும் உள்ள மொத்த வாக்காளர் எண்ணிக்கை 3,40,000 ஆகும். தேர்தல் களத்தில் 71 வேட்பாளர்கள் உள்ளனர். குப்வாரா தொகுதியில் அதிகபட்சமாக 19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
5 தொகுதிகளிலும் 448 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே அதிகப் பதற்றம், பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
ஜம்மு- காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு 7 கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 2 கட்டத் தேர்தல் ஏற்கெனவே முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.