மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தையடுத்து, இந்தோனேசியாவில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் பயணத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டு இந்தியா திரும்புகிறார்.
திட்டமிட்டபடி வரும் 3ஆம் தேதி வருவதற்குப் பதிலாக இரண்டு நாள் முன்னதாக டிசம்பர் 1ஆம் தேதியே அவர் நாடு திரும்புகிறார்.
மேலும், அன்றையதினம் நேரடியாக டெல்லி செல்வதற்குப் பதிலாக மும்பை செல்லும் பிரதீபா, பயங்கரவாதிகள் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
மராட்டிய ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஆலோசனை நடத்துகிறார்.