மும்பையில் தாக்குதல் நடத்த கடல்வழியாக வந்த பயங்கரவாதிகள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 5 மீனவர்களை கொலை செய்தனர். அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் இருந்து மும்பைக்கு சரக்கு கப்பலில் வந்த பயங்கரவாதிகள், கடலுக்குள் சசூலா என்ற கப்பல் நிறுத்தும் இடத்தில் இறங்கினர்
பின்னர் அவர்கள் 'குபேர்' என்ற படகில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த 5 மீனவர்களில் படகின் தலைவரை தவிர மற்ற 4 மீனவர்களை சுட்டுக் கொன்று அவர்களுடைய உடல்களை கடலுக்குள் வீசினர்.
படகின் தலைவர் உதவியுடன் மும்பை வந்தடைந்த பின்னர் அவரையும் கொன்று கடலில் வீசினர். படகையும் அப்படியே விட்டனர்.
கரையில் விடப்பட்ட அந்த படகையும், படகு தலைவரின் உடலையும் போர்பந்தர் அருகே கடலோர காவல் படையினர் நேற்று கைப்பற்றினர். இந்த நிலையில், மற்ற 4 மீனவர்களின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.