டெல்லியில் நேற்று காலமான முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கின் உடல் இன்று அலகாபாத் கொண்டு செல்லப்பட்டது. அங்கு நாளை அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
கடந்த பல ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த வி.பி. சிங் சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார்.
அவரது உடலுக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உட்பட ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
தற்போது வெளிநாடு சென்றிருக்கும் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், அங்கிருந்து இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார்.
தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, முதல் அமைச்சர் கருணாநிதி உட்பட பல்வேறு தலைவர்களும் வி.பி. சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அமைச்சரவையிலும், ராஜீவ் காந்தி அமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்த வி.பி. சிங் கடந்த 1999ஆம் ஆண்டு இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் ஆனார்.
பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்ட வி.பி. சிங், கடந்த சில ஆண்டுகளாக அரசியலை விட்டு ஒதுங்கியிருந்தார். இதையடுத்து டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், நேற்று பிற்பகல் மரணம் அடைந்தார்.
அவரது உடல் நேற்று அலகாபாத் கொண்டு செல்லப்பட்டது. அங்கு நாளை வி.பி. சிங்கின் உடல் தகனம் செய்யப்படும் என்று அவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.