மும்பையில் தாஜ் நட்சத்திர விடுதியிலும், நாரிமன் இல்லத்திலும் இருந்து பயங்கரவாதிகளை வெளியேற்றுவதற்காக ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
தாஜ் விடுதியில் இன்று அதிகாலை 2.45 மணியளவில் குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், நாரிமன் இல்லத்தில் தங்கியிருந்த 2 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த 2 பேர் யார் என்று அடையாளம் காணப்படவில்லை என்றும், நாரிமன் மாளிகையில் இருந்து அனைவரும் மீட்கப்பட்டு விட்டதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
ட்ரைடன் ஓபராய் விடுதியில் பதுங்கியிருந்த அனைத்து பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதுடன், அங்கு தாக்குதல் முடிவுக்கு வந்து விட்டதாக ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது தாஜ் விடுதிக்குள் 2 அல்லது 3 பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கக் கூடும் என்பதால், அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் இறங்கியுள்ளனர்.
இதற்கிடையே பயங்கரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதல், துப்பாக்கிச் சூட்டியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது.