Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

து‌ப்பா‌க்‌கி‌ச் சூ‌ட்டி‌ல் 3 காவ‌ல்துறை‌ அ‌திகா‌ரிக‌ள் ப‌லி!

து‌ப்பா‌க்‌கி‌ச் சூ‌ட்டி‌ல் 3 காவ‌ல்துறை‌ அ‌திகா‌ரிக‌ள் ப‌லி!
, வியாழன், 27 நவம்பர் 2008 (03:13 IST)
தெ‌‌ற்கு மு‌‌ம்பை‌யி‌ல் புத‌ன்‌‌கிழமை பய‌ங்கரவா‌திகளு‌ட‌ன் ந‌ட‌ந்த து‌ப்பா‌க்‌கி‌ச் ச‌ண்டை‌யி‌ல் மாலேகா‌‌ன் கு‌ண்டுவெடி‌ப்பு வழ‌க்கை ‌விசா‌ரி‌த்து வ‌ந்த காவ‌ல்துறை அ‌திகா‌ரி ஹேம‌ந்‌த் க‌ர்கரே உ‌‌ள்பட 3 காவ‌ல்துறை உய‌ர‌திகா‌ரிக‌ள் ப‌லியானா‌ர்‌க‌ள்.

மாலேகா‌னகு‌ண்டு வெடி‌ப்பு வழ‌க்கை ‌விசா‌ரி‌‌த்து வ‌ந்தவ‌ர் ஹேம‌ந்‌த் க‌ர்கரே (54). இவ‌ர் தா‌ஜ் ஓ‌ட்ட‌லி‌ல் பய‌ங்கரவா‌திகளா‌ல் ‌பிணை‌க்கை‌திகளாக ‌பிடி‌த்து வை‌க்க‌ப்‌ப‌ட்ட 7 அய‌ல்நா‌ட்டின‌ர் உ‌ள்பட 15 பேரை ‌மீ‌ட்கு‌ம் நடவடி‌க்கை‌‌க்கு தலைமை தா‌ங்‌கி‌ச் செ‌ன்றா‌ர்.

அ‌ப்போது பய‌ங்கராவ‌திகளு‌க்கு‌ம், காவ‌ல்துறை‌யினரு‌க்கு‌ம் இடையே நட‌‌ந்த து‌ப்பா‌‌க்‌கி‌ச் ச‌ண்டை‌யி‌ல் ஹேம‌ந்‌த் குமா‌ரி‌‌ன் நெ‌ஞ்‌‌சி‌ல் 3 தோ‌ட்டா‌க்க‌ள் பா‌‌ய்‌ந்தன. ‌இ‌தி‌ல் அவ‌ர் அ‌ந்த இட‌த்‌திலேயே ப‌லியானா‌ர்.

இதேபோ‌ல், ‌பய‌ங்கரவா‌திகளுட‌ன் நட‌‌ந்த மோத‌லி‌ல் ம‌ற்றொரு ஐ.‌பி.எ‌ஸ் அ‌திகா‌ரியான அசோ‌க் கா‌ம்தே எ‌ன்பவரு‌ம், எ‌ன்கவு‌ண்ட‌ர் ‌ஸ்பெஷ‌லி‌ஸ்‌ட்டான ‌விஜ‌ய் சலா‌ஸ்க‌ர் எ‌ன்ற காவ‌ல் துறை அ‌திகா‌ரியு‌ம் ப‌லியானா‌ர்க‌ள்.

Share this Story:

Follow Webdunia tamil