தாஜ் ஓட்டலில் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளுடன் நுழைந்த 2 பயங்கரவாதிகள் அங்கிருந்த 7 அயல்நாட்டினவர் உள்பட 15 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். பிணைக்கைதிகளில் ஒருவர் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தப்பித்து வந்துள்ளார்.
ஓட்டலின் ரெஸ்டாரண்டுக்குள் நுழைந்த 20 வயது மதிக்கத்தக்க 2 பயங்கரவாதிகள் அங்கிருந்த 15 பேரை துப்பாக்கி முனையில் மிரட்டி ஓட்டலின் மேல்தளத்துக்கு அழைத்துச் சென்று பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக, பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தப்பித்து வந்த ராகேஷ் பட்டேல் என்பவர் தெரிவித்துள்ளார்.
ஓட்டலின் 18-வது தளத்துக்கு தங்களை கொண்டுச் சென்ற போது அவர்களிடமிருந்து தான் தப்பித்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிணைக்கைதிகளில் யாரிடமாவது அமெரிக்கா, இங்கிலாந்து கடவுச்சீட்டு உள்ளதா என்று பயங்கரவாதிகள் மிரட்டியதாகவும் அவர் கூறினார்.