Publish Date: Wed, 26 Nov 2008 (15:16 IST)
Updated Date: Wed, 26 Nov 2008 (15:15 IST)
உத்தரப் பிரதேசத்தில் இன்று ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் விமானி ஒருவர் பலியானார். மேலும் ஒரு விமானி படுகாயமடைந்தார்.
பெரேய்லியில் ராம்கங்கா ஆற்றின் அருகில் உள்ள உச்சாகான் என்ற கிராமத்திற்கு அருகில் பயிற்சியில் ஈடுபட்டிந்த ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று திடீரென விழுந்து நொறுங்கியது.
இதில் சச்சின் பாட்டியா என்ற விமானி பலியானதுடன், துணை விமானியான டி.கே.சிங் என்பவர் படுகாயமடைந்தார். அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.