சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகள், தெலுங்கு தேசம், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் சார்பில் டிசம்பர் 2ஆம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக அக்கட்சிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "கச்சா எண்ணை விலை 67 டாலராக இருந்தபோது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை 50 டாலராக சரிந்து வரும் நிலையில் விலையை குறைக்க மறுப்பதில் நியாயமே கிடையாது.
எனவே, சாதாரண மக்களிடம் ஈவு இரக்கமின்றி செயல்படும் மத்திய அரசை கண்டித்து டிசம்பர் 2ஆம் தேதி இடதுசாரி மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெறும்.
நாடு முழுவதும் தர்ணா, ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் போன்றவை நடைபெறும்" என்று கூறப்பட்டுள்ளது.