சோமாலியக் கடற்கொள்ளையர்களிடம் பிணையக் கைதிகளாகச் சிக்கியிருந்த இந்தியர்கள் 5 பேர் சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு நாடு திரும்பினர்.
கென்யாவைச் சேர்ந்த எம்.டி. ஸ்டோல்ட் வலோர் என்ற எண்ணெய்க் கப்பல் 23,818 டன் எடையுள்ள பெட்ரோலியப் பொருட்களுடன் கடந்த செப்டம்பர் மாதம் சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது.
அந்தக் கப்பலில் இருந்த 18 இந்திய மாலுமிகள் பிணையக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கடற்கொள்ளையர்களுக்கும் கப்பல் நிறுவனத்திற்கும் இடையில் நடந்த பேச்சையடுத்து நவம்பர் 16ஆம் தேதி மாலுமிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மஸ்கட்டில் இருந்து இன்று அதிகாலை 5 மணியளவில் மும்பை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த மாலுமிகள் 5 பேரையும் அவர்களின் உறவினர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு பத்திரமாக வீடு திரும்பியுள்ள மாலுமிகளில் ஒருவரு கூறுகையில், 'மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை' என்றார்.