Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாய்பாபா 83வது பிறந்தநாள்: ஆசி பெற பக்தர்கள் குவிந்தனர்!

சாய்பாபா 83வது பிறந்தநாள்: ஆசி பெற பக்தர்கள் குவிந்தனர்!
, ஞாயிறு, 23 நவம்பர் 2008 (11:24 IST)
ஆந்திராவைச் சேர்ந்த சத்ய சாய்பாபாவின் 83வது பிறந்தநாள், புட்டபர்த்தியில் உள்ள அவரது ஆசிரமத்தில் இன்று கொண்டாடப்படுகிறது. அவரிடம் ஆசி பெறுவதற்காக இந்தியா மட்டுமின்றி அயல்நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புட்டபர்த்திக்கு வந்துள்ளனர்.

இதனால் ஆசிரமத்தில் கூட்டம் அலைமோதியது. சாய்பாபாவுக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் இருப்பதால் ஆசிரமத்திற்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

83வது பிறந்தநாளை முன்னிட்டு ஆசிரமத்தில் நடந்த விழாவில் சாய்பாபா பேசுகையில், இன்னும் 38 ஆண்டுகளில் இந்தியா வல்லரசாக மாறும். பிற சர்வதேச நாடுகள் நமது தலைமையின் கீழ் செயல்படவே ஆசைப்படும். அந்த அளவுக்கு இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.

உலகில் தற்போது போட்டி, பொறாமை பெருகி விட்டது. அதை விடுத்து அனைவரும் அன்பு மார்க்கத்திற்கு மாற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

Share this Story:

Follow Webdunia tamil