Publish Date: Fri, 21 Nov 2008 (14:17 IST)
Updated Date: Fri, 21 Nov 2008 (14:17 IST)
இலங்கைத் தமிழர்கள் சிறிலங்கா ராணுவத்தால் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து புதுவையில் பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றன.
மத்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தலையிட்டு உரிய முறையில் தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்தும் கோரிக்கையையும் அவர்கள் முன் வைத்துள்ளனர்.
இந்தக் கண்டன உண்ணாவிரதப் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., பெரியார் திராவிடர் கழகம், பகுஜன் சமாஜ் கட்சி, அம்பேத்கார் தொண்டர் பேரவை, தேசியவாத காங்கிரஸ், லோக் ஜனசக்தி, பார்வார்ட் பிளாக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் பங்கேற்றுள்ளன.
இதற்கிடையில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ம.க. தனியாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறது.