Publish Date: Fri, 21 Nov 2008 (12:59 IST)
Updated Date: Fri, 21 Nov 2008 (12:46 IST)
எதிர்காலத்தில் பல புதிய பொருளாதார வாய்ப்புகள் இந்தியாவிற்கு வரும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் இன்று இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு நடத்திய நிகழ்ச்சி ஒன்றி பேசிய சோனியா காந்தி, உலகளவில் பொருளாதார நெருக்கடி கட்டுக்குள் வந்துவிட்டது என்று தற்போது கூற முடியாது என்றார்.
பொருளாதார நெருக்கடி இந்தியாவிற்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் உள்ளிட்ட சர்ச்சையான விடயங்களுக்கு செல்ல விரும்பாத அவர், எதிர்காலத்தில் பல புதிய பொருளாதார வாய்ப்புகள் இந்தியாவிற்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
திறந்த பொருளாதாரத்தில் அரசு நம்பிக்கை கொண்டுள்ளது என்றும், ஆனால் அது ஒழுங்குமுறைக்கு உட்படாததாகவோ, சமூக நீதியை விலையாகக் கேட்பதாகவோ இருக்காது என்றும் சோனியா கூறினார்.
Webdunia
Publish Date: Fri, 21 Nov 2008 (12:59 IST)
Updated Date: Fri, 21 Nov 2008 (12:46 IST)