Publish Date: Fri, 21 Nov 2008 (11:43 IST)
Updated Date: Fri, 21 Nov 2008 (11:42 IST)
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நிலைய அதிகாரி ஒருவர் படுகாயமடைந்தார்.
பாரமுல்லாவில் உள்ள சோப்பூர் காவல் நிலையத்தின் மீது நேற்றிரவு தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசித் தாக்கினர்.
இதில் காவல் நிலைய அதிகாரி ஒருவர் படுகாயமடைந்தார். அவர் உடனடியாக ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
தீவிரவாதிகள் மறைவிடத்தில் இருந்து தாக்கியுள்ளதாகவும், அவர்களைப் பிடிக்கத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
Webdunia
Publish Date: Fri, 21 Nov 2008 (11:43 IST)
Updated Date: Fri, 21 Nov 2008 (11:42 IST)