தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண (கட்டணம் நிர்ணயம் மற்றும் வசூல்) விதிகள் 2008-க்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
வருடாந்திர கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் பொது-தனியார் பங்கேற்புடன் செயல்படுத்தப்படும் சாலைத் திட்டங்களை மேம்படுத்துவதற்கு இந்த விதிகள் பெரிதும் பயன்படும்.
பொது நிதியிலிருந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள், தனியார் முதலீடு செய்யும் திட்டங்கள், ஆகிய அனைத்துக்கும் கட்டண விகிதத்தை ஒரே அளவில் ஒழுங்குபடுத்துவதற்கு இது வழிவகுக்கும்.
ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவிடப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ள இரண்டு வழிப்பாதை தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்துவதற்கு இந்த விதிமுறைகள் வாயிலாக கட்டணம் விதிக்க முடியும்.