பயங்கரவாதத்திற்கு மதமில்லை என்று கூறிய காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங், பயங்கரவாதம் குறித்து பா.ஜ.க. இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றி வருகிறது என்று குற்றம்சாற்றினார்.
இதுகுறித்து மத்தியப் பிரதேசத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், பயங்கரவாதத்தை இந்து பயங்கரவாதம் என்றோ முஸ்லிம் பயங்கரவாதம் என்றோ முத்திரை குத்துவது சரியல்ல என்றார்.
பயங்கரவாதத்தை அரசியலாக்கும் பா.ஜ.க. இரட்டை நிலையைக் கொண்டுள்ளது என்று குற்றம்சாற்றிய திக்விஜய் சிங், மராட்டிய பயங்கரவாதத் தடுப்புப் படையினரின் நடவடிக்கைகளை பா.ஜ.க. எதிர்ப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.
மாநில அரசியலில் தேசியக் கட்சிகளின் பங்கு முக்கியமானது என்று குறிப்பிட்ட அவர், மத்தியப் பிரதேசத் தேர்தலில் பாரதீய ஜனசக்தி, பகுஜன் சமாஜ் கட்சி போன்ற மாநிலக் கட்சிகள் காங்கிரசின் வாக்குகளைப் பிரிக்கக் கூடும் என்றார்.