அஸ்ஸாமில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் உல்ஃபா இயக்கத் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
காம்ரூப் மாவட்டத்தில் பைஹாட்டா சரியாலி நகரத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹிந்துமெளஜூலி கிராமத்தில் சுற்றுக் காவல் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் உல்ஃபா இயக்கத் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கொல்லப்பட்ட தீவிரவாதியின் பெயர் விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை என்றும், அவரிடம் இருந்து எம்.20 துப்பாக்கி ஒன்றும், ஆஸ்திரியாவில் தயாரிக்கப்பட்ட கையெறி குண்டு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அஸ்ஸாம் ரைஃபிள் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.