தேசியவாதிகள் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை முன்னாள் தலைவருமான பி.ஏ. சங்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!
71 வயதான பி.ஏ. சங்மாவிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று மாலை அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
பி.ஏ. சங்மாவை முழுமையாக பரிசோதித்த பின்னரே அவரது உடல் நிலை குறித்து கூற முடியும் என்று அப்போலோ மருத்துவமனையின் இதய பிரிவு மருத்துவர் ரவி காஸ்லிவால் கூறியுள்ளார்.