Publish Date: Tue, 18 Nov 2008 (17:46 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:00 IST)
மாலேகான் குண்டு வெடிப்புகள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள லெப்டினன்ட் கலோனல் பி.எஸ். புரோஹித்தின் நீதிமன்றக் காவலை நவம்பர் 29 வரை நீட்டித்து நாசிக் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் 5 ஆம் தேதி கைது செய்யப்பட்ட புரோஹித்திடம் விசாரணை நடத்த நீதிமன்றம் வழங்கிய கால அவகாசம் இன்றுடன் முடிந்ததையடுத்து, அவர் இன்று நாசிக் மாவட்ட அமர்வு நீதிமன்ற நான்காவது கூடுதல் சிவில் நீதிபதி எச்.கே. கனட்ரா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, புரோஹித்தின் நீதிமன்றக் காவலை மேலும் 11 நாட்கள் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், வேண்டுகோளிற்கிணங்க மும்பை பயங்கரவாதத் தடுப்புப் படையினரிடம் இருந்த புரோஹித்தை புனே பயங்கரவாதத் தடுப்புப் படையினரிடம் நீதிமன்றம் ஒப்படைத்தது.
Webdunia
Publish Date: Tue, 18 Nov 2008 (17:46 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:00 IST)