Publish Date: Tue, 18 Nov 2008 (12:06 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:00 IST)
பானிபட் நெடுஞ்சாலையில் திருமண வீட்டினர் சென்ற பேருந்து லாரி ஒன்றின் மீது மோதிய விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 16 பேர் பலியானதுடன், 45க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
ஹரியானா மாநிலம் பானிபட்டில் இருந்து உத்தரப் பிரதேசத்தில் உள்ள சிசோலி நகருக்குத் திரும்பிக் கொண்டிருந்த திருமண வீட்டினர் பேருந்து இன்று அதிகாலை சரக்கு லாரியின் மீது மோதியதாகவும், இதில் 7 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியானதுடன் 45க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
காயமடைந்துள்ளவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கருதப்படுவதாகவும், இந்த விபத்திற்குக் காரணம் குறித்து விசாரணைக்குப் பிறகே கூற முடியும் என்றும் காவலர்கள் தெரிவித்தனர்.