மாலேகான் குண்டுவெடிப்பில் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள பெண் சாமியார் பிரக்யா தாகூர் சிங் உட்பட 7 பேரின் நீதிமன்றக் காவலை நாசிக் நீதிமன்றம் வரும் 29ஆம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டது.
குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என குஜராத் காவல்துறை சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிபதி ஹெச்.கே. கனாத்ரா நிராகரித்து விட்டார்.
சாத்வி உள்ளிட்டோரின் காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, சிறப்பு விசாரணைக் குழுவினர் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் நாசிக் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தினர்.
மேலும் அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதாக சிறப்பு விசாரணைக் குழு கேட்டுக் கொண்டது. இதையடுத்து அவர்கள் அனைவரின் நீதிமன்றக் காவலை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார்.