மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகியுள்ள லெப்டினன்ட் கலோனல் பி.எஸ். புரோஹித் மீது நாசிக்கில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புனேவில் வசிக்கும் சிரிஷ் யஷ்வந்த் டேட் என்பவர் குற்றப்பிரிவு காவல் துறையில் கொடுத்துள்ள புகாரில், தனக்கு ரிவால்வர் வாங்கித் தருவதாகக் கூறி புரோஹித் மோசடி செய்துவிட்டதாக கூறியுள்ளார்.
ராணுவ ஒதுக்கீட்டில் ரிவால்வர் வாங்கித் தருவதாகக் கூறித் தன்னிடம் இருந்து ரூ.20,000 த்தைப் புரோஹித் பெற்றதாகவும், ஆனால் தனது பெயரில் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து அந்த ரிவால்வரை புரோஹித்தே வைத்துக் கொண்டதாகவும் டேட் கூறியுள்ளார்.
நாசிக் அருகில் உள்ள தியோலாலி முகாமில் 2005 அக்டோபரில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக சர்க்கார்வாடா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.