Publish Date: Sun, 16 Nov 2008 (03:57 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:00 IST)
ஸ்ரீநகரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவரைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
ஜம்மு- காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள இக்பால் பூங்கா அருகில் முகமது ஹூசைன் வனி என்ற ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதியை சனிக்கிழமை மாலை காவலர்களும் பாதுகாப்புப் படையினரும் இணைந்து கைது செய்தனர் என்று காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
கந்தெர்பால் மாவட்டத்தைச் சேர்ந்த வனியிடம் இருந்து கைத் துப்பாக்கி ஒன்றும், சில புத்தகங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.