மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் இந்து மதத் தலைவர்கள் குறிவைத்துக் கைது செய்யப்படுகின்றனர் என்ற பா.ஜ.க. வின் குற்றச்சாற்றை மறுத்துள்ள மராட்டியக் காவல் துறையினர், "இந்த வழக்கில் நடந்துள்ள ஒவ்வொரு கைதிற்கும் பின்னால் வலுவான ஆதாரம் உள்ளது" என்று கூறியுள்ளனர்.
மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக மும்பையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த மராட்டிய மாநிலக் காவல் துறைத் தலைவர் ஏ.என். ராய், "செப்டம்பர் 29 மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையின் மீது அரசியல் கட்சிகள் கூறும் மறைமுக விமர்சனங்களால் நாங்கள் பாதிக்கப்படுகிறாம்.
அரசியல் கட்சிகள் இதுபோன்ற நடவடிக்கைகளைக் கைவிட்டு நாங்கள் எங்களின் விசாரணையில் தீவிரக் கவனம் செலுத்த உதவ வேண்டும். இந்த வழக்கில் ஒவ்வொரு கைதும் வலுவான ஆதாரத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.