வடமாநில மக்களுக்கு எதிராக அவதூறாக பேசியதாக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே மீது பிணையில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பிக்கப்ட்டதையடுத்து, அவர் இன்று மும்பை மாசகோவான் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்கரே வடநாட்டினர் மும்பையில் தங்கக் கூடாது, அவர்கள் இங்கு 'சாத் பூஜை'யை கொண்டக்கூடாது என்று அவதூறாக பேசியதாக ஜாம்ஜெட்பூர் நீதிமன்றம் அவருக்கெதிராக பிணையில் வர முடியாத வாரண்ட்டை பிறப்பித்தது.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்யும் நடவடிக்கைகளில் இறங்கினர். இந்த நிலையில் ராஜ்தாக்கரே மும்பை மாசகோவான் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.
பின்னர் அவர் ரூ.50 ஆயிரம் செலுத்தி தனது சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையே, ராஜ்தாக்கரே சரணடையவில்லை என்றும் தாங்கள்தான் அவரைக் கைது செய்ததாகவும் மும்பை காவல்துறையினர் கூறியுள்ளனர்.