உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் மற்றுமொரு நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில் 2 பேர் காயமடைந்தனர்.
இந்த குண்டு குறைந்த சக்தி உடையது என்றும் குண்டு வெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் நேரில் பார்த்தவர்கள் இந்த குண்டு வெடிப்பில் 2 பேர் காயமடைந்ததாக கூறியுள்ளனர்.
இதையடுத்து, லக்னோ காவல்துறை கண்காணிப்பாளர், மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகள் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து நீதிமன்ற வளாகத்துக்கு சீல் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து 2-வது நாளாக நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடித்ததால் நீதிமன்றம் முழுவது பீதி நிலவியது. நேற்றும் இங்கு ஒரு நாட்டு வெடிகுண்டு வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.