சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக இன்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல பூஜை நாளை தொடங்குகிறது. இதையொட்டி கோயில் நடை இன்று மாலை 5.30 மணிக்குத் திறக்கப்படுகிறது.
தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் தற்போதைய மேல்சாந்தி கிருஷ்ணன் நம்பூதரி கோயில் நடையைத் திறந்து அய்யப்பனுக்கு தீபாதாரனை நடத்துகிறார். பின்னர் புதிய மேல்சாந்தி விஷ்ணு நம்பூதரி பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
பின்னர் 16ஆம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் புதிய மேல்சாந்தி விஷ்ணு நம்பூதரி நடையைத் திறந்து இந்த வருட மண்டல பூஜைகளைத் தொடங்கி வைக்கிறார்.
டிசம்பர் 26 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு மண்டல பூஜை நடக்கிறது. அன்று இரவு நடை அடைக்கப்படுகிறது.
பின்னர் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30 ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்படுகிறது. ஜனவரி 14 ஆம் தேதி மகரவிளக்கு தரிசனம் நடக்கிறது. 19 ஆம் தேதியுடன் பக்தர்கள் தரிசனம் நிறைவு பெறுகிறது. 20 ஆம் தேதி பந்தளம் ராஜ குடும்பத்தினர் மட்டும் அய்யப்பனைத் தரிசனம் செய்கிறார்கள். அதன்பிறகு நடை அடைக்கப்படுகிறது.