ஜார்கண்ட் மாநிலம் சந்திரபூரா ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு நடந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
பொக்காரோ நகரத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சந்திரபூரா ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு 7.45 மணியளவில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் ஒருவர் படுகாயமடைந்தார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து அப்பகுதி முழுவதும் பதற்றம் நிலவுகிறது. தெருக்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின என்று காவலர்கள் தெரிவித்தனர்.
பழைய பதிவு அலுவலகம் அருகில் பை ஒன்றில் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களாக சுவரொட்டிகள் மூலம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நக்சலைட்டுகள் இந்தச் சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என்றும் செய்திகள் கூறுகின்றன.