அஸ்ஸாமில் 84 பேரைப் பலிகொண்ட அக்டோபர் 30 தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்பாக ஒரு பூட்டான் நாட்டவர் உட்பட 6 பேரைக் காவலர்கள் கைது செய்துள்ளனர்.
வங்கதேசத்தைச் சேர்ந்த அடிப்படைவாதக் குழுக்களுடன் தொடர்பு வைத்துள்ள உல்ஃபா, என்.டி.எஃப்.பி ஆகிய அமைப்புகள் நடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் அஸ்ஸாம் தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்பாக இதுவரை 23 பேரைக் காவலர்கள் கைது செய்துள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள 6 பேரில் பூட்டான் நாட்டைச் சேர்ந்த டென்சிங் ஜி ஜாங்போ, என்.டி.எஃப்.பி. இயக்கத்தை சேர்ந்த சபின் போரா ஆகியோர் வாடகை வீட்டில் தங்கியிருந்தபோது புதன்கிழமை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மற்ற 4 பேரின் விவரங்கள் விசாரணைக்குப் பிறகு வெளியிடப்படும் என்று காவலர்கள் தெரிவித்துள்ளனர்.