விடுதலைப் புலிகளை ராணுவ ரீதியாகவே எதிர்கொள்வோம் என சிறிலங்க அரசு சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் தெளிவுபடுத்தியுள்ளது. எனினும், அவர்களால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லியில் இன்று நடந்த வங்கக்கடல் வழி தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் (BIMSTEC) பேசிய போது இதனைத் தெரிவித்த சிறிலங்கா அதிபர் மகிந்தா ராஜபக்ச, கடந்த 20 ஆண்டுகளாக விடுதலைப் புலிகளின் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதல்களால் நாட்டு மக்களின் ஜனநாயக வாழ்க்கை கடும் சவால்களை சந்தித்து வருகிறது.
எனவே, அதுபோன்ற அமைப்புகள் ராணுவ ரீதியாக கையாளப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை என்றார்.
இந்த பயங்கரவாத அமைப்பினரின் நடவடிக்கைகள், தொடர்புகளை தடுக்கும் விதமாக வங்கக் கடல் பகுதியில் கண்காணிப்பு, ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என இந்தியாவுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.