Publish Date: Thu, 13 Nov 2008 (11:38 IST)
Updated Date: Thu, 13 Nov 2008 (11:35 IST)
ஜம்மு-காஷ்மீரில் உள்ள செனாப் ஆற்றில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
அம்மாநிலத்தின் பிரேம்நகர் பகுதியில் இருந்து டோடா மாவட்டத்திற்கு சென்ற வாகனம் கரானா என்ற இடத்தில் செனாப் ஆற்றில் நேற்று கவிழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த ராணுவ அதிகாரிகளும், காவல்துறையினரும் விபத்துப் பகுதிக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டதாகவும், காயமடைந்த 15 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதுவரை 11 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 2 பேரது நிலை குறித்து தகவல் இல்லாததால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.