Publish Date: Thu, 13 Nov 2008 (02:23 IST)
Updated Date: Thu, 13 Nov 2008 (02:22 IST)
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் சர்வதேச எல்லைக் கோட்டிற்கு அருகில் ஒரு மறைவிடத்தில் இருந்து 5 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடி பொருளையும், வெடி மருந்து நிரப்பிய 6 குழல்களையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
ஜம்முவில் புதன்கிழமை இத்தகவலைத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சகப் பேச்சாளர், வெடி பொருட்களைப் பதுக்கியது யார் என்பது குறித்து முக்கியத் தடயம் சிக்கியுள்ளதாகவும் அதுபற்றி விரைவில் தகவல் தரப்படும் என்றும் கூறினார்.
பாதுகாப்புப் படையினர் நடத்திய மற்றொரு தேடுதல் வேட்டையில் சன்ஜியோட் என்ற இடத்தில் ஒரு பதுங்கு குழியிலிருந்து ரிமோட் மூலம் இயக்கப்படும் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றைப் பறிமுதல் செய்துள்ளனர் என்றும் பேச்சாளர் தெரிவித்தார்.