Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஸ்ஸாமில் மிக்-21 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது!

Advertiesment
அஸ்ஸாமில் மிக்-21 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது!
, புதன், 12 நவம்பர் 2008 (16:10 IST)
அஸ்ஸாமின் சிப்சாகர் மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது. எனினும் அதில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 2 விமானிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

இதுகுறித்து இந்திய விமானப்படை அதிகாரிகள் கூறுகையில், இன்று காலை 10.45 மணியளவில் திப்ருகாரில் உள்ள சபுவா விமான தளத்தில் இருந்து பயிற்சிக்காக கிளம்பிய மிக்-21 ரக போர் விமானம் அடுத்த 3 நிமிடங்களிலேயே கரியாபத்தூர் அருகே உள்ள மதுராப்பூரில் விபத்துக்குள்ளானது என்றனர்.

எனினும், அதில் பயணித்த அணித்தலைவர் சுபன்தீப், துணைத்தலைவர் நந்தா ஆகிய இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும், அவர்களது உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் விமானப்படை அதிகாரிகளும், காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil