மாலேகான் குண்டு வெடிப்பில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர் ஒருவருக்குத் தொடர்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாலேகான் குண்டு வெடிப்புத் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு உள்ளவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர் ஒருவரிடம் விசாரணை நடத்துவதற்கு நாசிக் நீதிமன்றத்தில் மராட்டிய பயங்கரவாதத் தடுப்புப் படையினர் அனுமதி கேட்டுள்ளனர்.
"முக்கியப் பொறுப்பில் உள்ள தலைவரிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு விசாரணை நடத்தப்படுமானால் அதற்கு ஒத்துழைக்குமாறு உ.பி. அரசைக் கேட்டுக்கொண்டுள்ளோம்" என்று பயங்கரவாதத் தடுப்புப் படையின் சிறப்பு வழக்கறிஞர் அஜய் மீசார் கூறியுள்ளார்.