தோடா மாவட்டத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்வா என்ற இடத்தில் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையில் இன்று அதிகாலை கடுமையான மோதல் துவங்கியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பக்வாவில் உள்ள பிம்னா என்ற இடத்தில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையில் இன்று அதிகாலை கடுமையான துப்பாக்கிச் சண்டை மூண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர் என்று யு.என்.ஐ. செய்தி கூறுகிறது.
மறைவிடத்தில் இருந்து பயங்கரமான ஆயுதங்களுடன் ராணுவத்தினரைத் தாக்கிவரும் தீவிரவாதிகள் குழுவில் 3 முதல் 4 பேர் இருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன.
குறிப்பிட்ட பகுதியைச் சுற்றிவளைத்துள்ள ராணுவத்தினர் தீவிரவாதிகள் தப்பிப்பதற்கு உள்ள எல்லா வழிகளையும் அடைத்து விட்டனர் என்று கூறியுள்ள அதிகாரிகள், தீவிரவாதிகளின் அடையாளங்கள் பின்னர் வெளியிடப்படும் என்றனர்.