மாரடைப்பு காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி இன்று வீடு திரும்பினார்.
அவரது உடல்நிலையில் சிறப்பான முன்னேற்றம் காணப்பட்டாலும், மேலும் ஒரு வாரத்திற்கு பூரண ஓய்வில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக அடுத்த 7 நாட்கள் சோம்நாத் சாட்டர்ஜி பங்கேற்பதாக இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இருதய பாதிப்பு காரணமாக கடந்த 5ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோம்நாத் சாட்டர்ஜி, விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று குடியரசுத் தலைவர் அவருக்கு மலர்க்கொத்துடன் கூடிய செய்தியை அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.