Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரதமர் இன்று ஓமன் பயணம்!

பிரதமர் இன்று ஓமன் பயணம்!
, சனி, 8 நவம்பர் 2008 (03:52 IST)
ஓமன் மற்றும் கத்தார் நாடுகளில் 3 நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மன்மோகன்சிங் இன்று புறப்பட்டுச் செல்கிறார்.

எண்ணெய் வள நாடுகளுக்குச் செல்லும் பிரதமர், அங்கு அந்நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேசுவதுடன் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உள்ளதாக புதுடெல்லியில் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்றும், நாளையும் ஓமனில் சுற்றுப்பயணம் செய்யும் அவர், 10ஆம் தேதியன்று கத்தார் செல்கிறார்.

பிரதமருடன் வெளிநாட்டு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி, வெளியுறவுத் துறை இணையமைச்சர் இ.அகமது உள்ளிட்ட உயர் மட்ட குழுவினரும் செல்கிறார்கள்.

எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட இருதரப்பு நல்லுறவு மற்றும் மண்டல, சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் பிரதமர் அந்த நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுகள் நடத்துவார் என்று தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil