மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி மாரடைப்பால் புதுடெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சோம்நாத் சட்டர்ஜிக்கு புதனன்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்து பார்த்தபோது, மார்பு பகுதியில் ரத்தம் உறைந்து இருப்பது தெரிய வந்ததால், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சோம்நாத் சாட்டர்ஜியை சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.