Publish Date: Fri, 07 Nov 2008 (02:03 IST)
Updated Date: Fri, 07 Nov 2008 (02:03 IST)
மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக ராணுவ அதிகாரி ஒருவர் கைதாகியிருப்பதைத் தொடந்து, மேலும் சில ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவதற்கு மகாராஷ்டிர தீவிரவாத எதிர்ப்புப் பிரிவினர் அனுமதி கேட்டிருப்பதாகத் தெரிகிறது.
இதனால், தற்போது பதவியில் இருக்கும் மேலும் சில ராணுவ அதிகாரிகள் இந்த குண்டுவெடிப்பில் கைதாகக் கூடும் என்று தெரிகிறது.
கைதான லெப்டினன்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித்திடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் மேலும் சில அதிகாரிகள் சிக்கலாம் என்று தெரிகிறது.
மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் மும்பை போலீசார், ஸ்ரீகாந்திடம் இந்த ஆண்டு நடைபெற்ற வேறு குண்டுவெடிப்புகளிலும் தொடர்பு உள்ளதா எனபது குறித்து விசாரணை நடத்தியதாக பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.
மராத்தா ரெஜிமெண்டைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றியதாகவும், அப்போது அபினவ் பாரத் என்ற பிரிவினைவாத குழுவுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடைய மேலும் 2 பேரைத் தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Webdunia
Publish Date: Fri, 07 Nov 2008 (02:03 IST)
Updated Date: Fri, 07 Nov 2008 (02:03 IST)