இந்தியா - ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேச சிறைகளில் குற்றம்சாட்டப்பட்ட அல்லது தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் இருந்தால் அந்தக் குற்றவாளிகளை பரஸ்பரம் மாற்றிக்கொள்வதற்கு வகை செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும், அமல்படுத்தவும் மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் குற்றவாளிகள் என உறுதிசெய்யப்பட்ட ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களது சொந்த நாட்டுக்கு மாற்றம் செய்யப்பட முடியும் இதேபோல், ஹாங்காங்கில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குற்றவாளிகள் இந்தியாவுக்கு கொண்டுவர முடியும் இதனால் அவர்களின் மீதமுள்ள தண்டனை காலத்தை சொந்த நாட்டிலேயே அனுபவிக்க முடியும்.
இது சிறைக் கைதிகள் அவர்களது குடும்பங்களுக்கு அருகில் இருக்க சாத்தியமாக்கும். இதனால் அவர்கள் சமூகத்தில் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்ப உதவியாக இருக்கும்.
கிரிமினல் குற்றவாளிகளை பரிமாற்றம் செய்து கொள்வது, ஒரு நாட்டால் தேடப்பட்டு வரும் ஒரு கைதி தங்கள் நாட்டில் இருந்தால் அவர்களை அந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பது. ஒரு நாட்டில் தண்டனை பெற்ற ஒருவருக்கு அவர் எந்த நாட்டில் இருக்கிறாரோ அதே நாட்டில் தண்டனையை அனுபவிக்க வழிவகை செய்வது தொடர்பான இந்த ஒப்பந்தத்திற்கு பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.