சர்வதேசச் சந்தையில் ரூ.70 கோடி மதிப்புள்ள 14 கிலோ ஹெராயின் போதைப் பொருளை பஞ்சாப் மாநில௦ காவல் துறையின் சிறப்பு போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆஃப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் போதைப் பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. கடத்தல்காரர்கள் தங்களின் கடத்தலிற்குப் பெரும்பாலும் பஞ்சாப், ராஜஸ்தான் மாநில எல்லைகளைத்தான் பயன்படுத்துகின்றனர்.
இதைத் தடுப்பதற்காக அந்தந்த மாநிலங்களின் காவல் துறையில் போதைப் பொருள் கடத்தலைத் தடுப்பதற்கென்றே சிறப்புப் படைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பஞ்சாப் மாநில சிறப்பு போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் படையினர் நடத்திய சோதனையில் 14 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேசச் சந்தையில் இதன் மதிப்பு ரூ.14 கோடி என்று அப்படையின் சிறப்புப் கண்காணிப்பாளர் பர்வீன் சின்ஹா தெரிவித்தார்.
இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் ஒருவரைத் தேடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஹெராயின், டெல்லிக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப்பிற்குள் கடத்தப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்துள்ளது என்றும் பர்வீன் சின்ஹா கூறினார்.