Publish Date: Wed, 05 Nov 2008 (23:01 IST)
Updated Date: Wed, 05 Nov 2008 (23:01 IST)
ஆந்திர மாநிலத்தில் சிரஞ்சீவி தலைமையிலான பிரஜா ராஜ்யம் கட்சியுடன் பாஜக கூட்டணி ஏதும் வைத்துக் கொள்ளவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பண்டாரு தத்தாத்ரேயா கூறியிருக்கிறார்.
திருப்பதியில் புதனன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆந்திர மாநிலத்தைப் பொருத்தவரை சிரஞ்சீவி தொடங்கியுள்ள பிரஜா ராஜ்யம் கட்சியுடன் பாஜக கூட்டு சேர்வதற்கான வாய்ப்பே இல்லை என்று கூறினார்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பொடா சட்டம் மீண்டும் அமலுக்கு வரும் என்று அவர் கூறினார்.
ஜனநாயகத்தை காக்கவும், இந்திய கலாச்சாரத்தை நிலை நாட்டவும் கூடிய ஒரே கட்சி பாஜக மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, திருப்பதி திருமலை வெங்கடேசப் பெருமாள் கோயிலில் புதனன்று தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.