Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பூட்டானுக்கு புறப்பட்டார் பிரதீபா பாட்டீல்!

Advertiesment
பூட்டானுக்கு புறப்பட்டார் பிரதீபா பாட்டீல்!
, புதன், 5 நவம்பர் 2008 (12:27 IST)
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் 4 நாள் அரசுமுறைப் பயணமாக பூட்டானுக்கு இன்று புறப்பட்டுச் சென்றார்.

PTI PhotoFILE
நாட்டின் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் அவர் பூட்டான் செல்வது இதுவே முதன்முறையாகும்.

பூட்டான் மன்னராக நாளை பதவி ஏற்கும் 28 வயதான ஜிக்மே கேசர் நம்க்யெல் வாங்சுக்கின் முடிசூட்டு விழாவில் பிரதீபா கலந்து கொள்கிறார். இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரும் இவ்விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

பிரதீபாவின் இந்த பயணத்தின் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil