அமெரிக்காவின் 44 ஆவது அதிபராக வெற்றி பெற்றுள்ள பாரக் ஒபாமாவின் தலைமையில் இந்திய- அமெரிக்க நல்லுறவு மேலும் வலுப்பெறும் என்று காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் பேச்சாளர் அபிஷேக் மனு சிங்வி டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், இளமைச் சக்தி, பன்முகத்தன்மை, தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய முன்னோக்கிய மன ஓட்டம் ஆகியவற்றை பாரக் ஒபாமா பிரதிபலிக்கிறார் என்றார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரால் நன்கு வலுப்படுத்தப்பட்டுள்ள இந்திய- அமெரிக்க நல்லுறவுகள் தொடர்ந்து வலிமையாக நீடிக்கும். இந்த உறவுகள் எந்தவொரு அமெரிக்க அதிபரின் தனிப்பட்ட வாழ்க்கை, அரசியலைச் சார்ந்ததல்ல. இருந்தாலும் பாரக் ஒபாமாவின் தலைமையில் இவை மேலும் வலுப்படும் என்றார் அவர்.