அஸ்ஸாமில் 82 பேர் பலியாவதற்குக் காரணமான அக்டோபர் 30 குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 5 பயங்கரவாதிகளின் வரைபடங்களை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த வரைபடங்கள், குண்டு வெடிப்பு நடந்த முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 5 பேர் அளித்துள்ள சாட்சியங்களின் அடிப்படையில் கொல்கத்தாவைச் சேர்ந்த ஓவியர்கள் வரைந்தவை ஆகும்.
வரைபடத்தின்படி தாடியை மழுங்க வழித்து கட்டை மீசையுடன் காணப்படும் நடுத்தர வயதுடைய நபர்தான் முக்கியக் குற்றவாளியாக இருக்கக் கூடும் என்றும், வரைபடங்கள் யாவும் குற்றவாளிகளின் உண்மைத் தோற்றத்துடன் 75 விழுக்காடு வரை ஒத்துப்போவதாகவும் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.