Publish Date: Tue, 04 Nov 2008 (15:14 IST)
Updated Date: Tue, 04 Nov 2008 (15:13 IST)
இமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் இன்று காலை தனியார் பேருந்து ஒன்று 300 அடி பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில் அதில் பயணம் செய்த 43 பேர் பலியானார்கள். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.
கோட்டிகாட் என்று இடத்தில் இருந்து சிம்லா நோக்கி 50 பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்த தனியார் பேருந்து லாம்பிதார் என்ற இடத்துக்கு அருகே வந்தபோது சாலையில் இருந்து விலகிச்சென்று பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 43 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து நிகழ்விடத்துக்கு விரைந்த ராணுவமும், மீட்பு குழுவினரும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டதோடு காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த விபத்துக் குறித்து காவல்துறை உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
Webdunia
Publish Date: Tue, 04 Nov 2008 (15:14 IST)
Updated Date: Tue, 04 Nov 2008 (15:13 IST)