வடகிழக்கு டெல்லியில் உள்ள ராஷ்ட்ரவாடி சிவசேனா கட்சி அலுவலகத்தில் தீ பிடித்தது.
ஷாதரா என்ற இடத்தில் உள்ள சிவசேனா அலுவலகத்தில் இன்று காலை 9.10 மணிக்கு தீ பிடித்ததாக வந்த தகவலையடுத்த 6 தீயணைப்பு வண்டிகள் விரைந்ததாகவும், தீ பிடித்தற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பால் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் வட இந்தியர்களுக்கு எதிரான கொள்கைகளைக் கண்டித்து உருவாக்கப்பட்டுள்ள ராஷ்ட்ரவாடி சிவசேனா கட்சி, மராட்டிய நவநிர்மாண் சேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரேவைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராடி வருகிறது.
ராஷ்ட்ரவாடி சிவசேனாக் கட்சி தொண்டர்கள் நேற்று டெல்லியில் உள்ள மராட்டிய நவநிர்மாண் அமைப்பின் அலுவலகமான மராட்டிய சதனைத் தாக்கினர்.
மேலும், ராஜ் தாக்கரேவை உடனடியாக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யாவிடில் இன்னும் வலிமையாகத் தாக்குவோம் என்று ராஷ்ட்ரவாடி சிவசேனா தலைவர் ஜெய்பகவான் கோயல் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் இன்று ராஷ்ட்ரவாடி சிவசேனா அலுவலகத்தில் தீ பிடித்துள்ளது.